இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்தது.
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 91 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல் கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணியில் கையில் ஜேமீசன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றி மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியானது ஜனவரி 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.
களமிறங்கும் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஏதோவொரு சாதனையை விராட் கோலி படைத்துக்கொண்டே இருக்கிறார். அதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 93 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு வருத்தமளித்தாலும், அந்த போட்டியில் மட்டும் அவர் 5 மெகா ரெக்கார்டுகளை படைத்துள்ளார்.
அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் கோலி. மொத்தமாக 28,016 ரன்கள் எடுத்துள்ளார்.
2வது சாதனையாக, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி. (1,750 ரன்கள்).
இந்தியாவுக்காக ஒருநாள் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளா விராட். 309 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அனைத்து பார்மெட்களிலும் 3வது வரிசையில் களமிறங்கி 100 அரைசதங்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி.
மேலும் அனைத்து பார்மெட்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக 3,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார்.
