இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இத்தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்திருந்தது. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் 3-வது நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. 4-அது நாள் ஆட்டத்தில் 339 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை எனவும், இந்தியா வெற்றிக்கு 4 விக்கெட்கள் தேவை என்ற பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

இதில், 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் இங்கிலாந்து ஆல் அவுன் ஆக, இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது. இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்களும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்களையும் வீழ்த்தியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version