19வது ஐபிஎல் தொடரின் இன்றைய (மே 5) 48வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 4ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றியும், 5ல் தோல்வியும் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும்  வெற்றி- தோல்வி கணக்கில் சமநிலையுடன் இருக்க நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னை ஒரு இடம் முன்னிலையில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் நிலைக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளதால், இரு அணிகள் தீவிரம் காட்டும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version