Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»101 ரன்களில் சுருண்டது பஞ்சாப் கிங்ஸ்.. பெங்களூருவுக்கு எளிய இலக்கு!
    விளையாட்டு

    101 ரன்களில் சுருண்டது பஞ்சாப் கிங்ஸ்.. பெங்களூருவுக்கு எளிய இலக்கு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ipl
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாடாத ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார்.

    முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினர். நடப்பு சீசனில் அதிரடியான தொடக்கத்தை வழங்கி வந்த இந்த ஜோடி, இம்முறை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. யாஷ் தயாள் பந்துவீச்சில் பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன்சிங் 18 ரன்களில் வெளியேறினார்.

    பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. வெறும் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களில் சுருண்டது.

    பெங்களூரு தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய சுயாஷ் சர்மா மற்றும் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

     

    ipl
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசில்லறை தருவதாக கூறி ரூ.22,000 அபேஸ்! சி.சி.டி.வி காட்சிகள் வைரல்!
    Next Article பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: அவதூறு வீடியோக்களுக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழக்கு!
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?

    May 30, 2026

    GT-யிடம் தோல்வி!. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத சூர்யவன்ஷி!. வைரல் வீடியோ!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.