2025-ம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி கோப்பையை ஜார்கண்ட் அணி வென்றுள்ளது.
டி20 கிரிக்கெட் வடிவிலான இப்போட்டியின் இறுதிப் போட்டி, புனேயில் நடைபெற்றது. இதில் ஹரியானா அணியும், ஜார்க்கண்ட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹரியானா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர் இசான் கிசன் அதிரடியாக ஆரம்பம் முதல் ரன்களை குவித்தார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதேபோல் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி, 49 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார்.
இதன்பின்னர் 263 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஹரியானா அணி விளையாடியது. அந்த அணியால் ஜார்கண்ட் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் விக்கெட்டுகள் சரிந்தபடி இருந்தது. முடிவில் 18.3 ஓவர்களில் ஹரியானா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஜார்க்கண்ட் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது அநுகுல் ராய்க்கும் வழங்கப்பட்டது. 2 பேரும் ஜார்க்கண்ட் அணி வீரர்கள் ஆவர்.
