ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 53வது சதத்தை அடித்து இந்திய அணி வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சியில் அண்மையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் அதிரடியாக 135 ரன்களை சேர்த்தார். இது ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவரின் 53வது சதமாகும்.

இதையடுத்து தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ராய்ப்பூரில் இன்று நடக்கும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக கோலி விளையாடினார். 90 பந்துகளில் கோலி 100 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இந்த சதம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கோலியின் 53வது சதமாகும். அதேபோல், சர்வதேச அரங்கில் அவரின் 84வது சதமாகும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 53, டெஸ்ட் போட்டிகளில் 30, டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் ஒரு சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 39.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை சேர்த்திருந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version