தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடக்கும் 5வது டி20 போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதிரடிக்கு பெயர் போனவர் சூரியகுமார் யாதவ். இதனாலேயே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் அவர் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடவில்லை.

முதல் டி20 போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 2வது டி20 போட்டியில், 4 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார்.

3வது டி20 கிரிக்கெட் போட்டியில், 11 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 4வது டி20 போட்டி, பனிமூட்டம் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் சூரியகுமார் யாதவின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுந்தது.

இதையடுத்து இன்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல அவர் 7 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களில் அவுட்டானார்.

இதுபோல் தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 டி20 போட்டிகளில் அவர் மொத்தம் எடுத்தது 34 ரன்கள் மட்டுமே ஆகும். இதனால் சூரியகுமார் யாதவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மோசமான ஆட்டத்தால், சூரியகுமார் யாதவின் கேப்டன் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version