கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட விறுவிறுப்பான பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (மே 20) இரவு 7:00 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
ரசிகர்களின் வசதிக்காகப் போட்டிகளின் அடிப்படையில் வெவ்வேறு தேதிகளில் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் போட்டிக்கான டிக்கெட்கள் வரும் 20, 21-ம் தேதிகளிலும், குவாலிஃபையர் 2, இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 22, 22-ம் தேதிகளிலும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
டிக்கெட் வாங்குவது எப்படி? ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளைக் மைதானத்திற்குச் சென்று நேரில் காண விரும்பும் ரசிகர்கள், ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iplt20.com பக்கத்திற்குச் சென்று தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
