விறுவிறுப்பாக நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார்.

கிரான்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர்கள் இப்போட்டியில் பலபரீட்சை நடத்தி வருகின்றனர். அந்த வகையில்,

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசை சேர்ந்த அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version