இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலனுடன் நாளை மறுநாள் ( நவம்பர் 23 2025 ) திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி உலக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டி நடந்த டி ஒய் பட்டில் மைதானத்திற்கு ஸ்மிருதி மந்தனாவை அவரது காதலரான பலாஷ் முச்சல் நேற்று அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த மைதானத்தில் வைத்து அவர் ஸ்மிருதி மந்தனாவிடம் திருமண ப்ரொபோசலை நடத்தி இருக்கிறார். ஸ்மிருதி மந்தனாவும் திருமணத்திற்கு சரி என்று சொல்ல இருவரும் மோதிரத்தை பரிமாறிக் கொண்டனர். அந்த திருமண ப்ரோபோசல் வீடியோ சமூக வலைதளங்கள் அனைத்திலும் வைரலாகி வருகிறது.
https://x.com/thetatvaindia/status/1991772095756505107?t=6V-bY3tcTEQHSjqR0kChGA&s=19
ஸ்மிருதி மந்தனாவை கரம் பிடிக்கும் பலாஷ் முச்சல் இந்திய இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் ஆவார்.
இவர்கள் இருவரது திருமணத்திற்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மறுபக்கம் திருமணத்திற்கு முன்பாக நடக்கப்படும் Haldi celebration ( மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி ) இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
