2026 T20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடருக்காக, ஆஸ்திரேலியா முக்கிய அணியை இன்று அறிவித்துள்ளது. முந்தைய அணியில் இடம்பெற்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த முறை அணியில் இல்லை; அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியா தனது அணியில் இரண்டு மாற்றங்களையும் செய்துள்ளது. இன்று (ஜனவரி 31) அணியை மாற்றுவதற்கான இறுதி நாளாகும்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. ஆஸ்திரேலியா பி பிரிவில் இடம்பெற்றுள்ளது, இந்த பிரிவில் உள்ள அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தக் காயத்திலிருந்து மீண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாட் கம்மின்ஸ், உத்தேச அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பிரதான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

https://x.com/CricketAus/status/2017493338245763190?

ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள்: கம்மின்ஸ் மட்டுமல்லாமல், ஆரம்பக்கட்ட அணியில் இடம்பெற்றிருந்த மாட் ஷார்ட்டும் கூட பிரதான அணியில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக மாட் ரென்ஷா மற்றும் பென் ட்வார்ஷூயிஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனுபவமிக்க பந்துவீச்சாளரான கம்மின்ஸ் இல்லாதது அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தாலும், மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணி வலுவாகத் தெரிகிறது. இதில் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்; இவர்கள் அனைவரும் டி20 வடிவத்தில் புகழ்பெற்ற ஆட்டக்காரர்கள் ஆவர்.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொனோலி, டிம் டேவிட், பென் ட்வார்ஷுயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குனெமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version