2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று சென்னை வந்தடைந்தது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மா (Mahieka Sharma) என்பவருடன் நெருக்கமாகக் காணப்பட்டார். அவரது தோளில் கை போட்டபடி ஹர்திக் நடந்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://x.com/ANI/status/2025876091492311050
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் வந்திருந்தார். மற்ற வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய நேரப்படி பிப்ரவரி 26 அன்று மாலை 7 மணிக்கு ஜிம்பாப்வே உடனான ஆட்டம் தொடங்குகிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமானது. முன்னதாக அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர்-8 முதல் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி மீண்டு வரும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

