இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டுகால தடையை, கேரள கிரிக்கெட் சங்கம்  தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. கேரள கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளை அவமதிக்கும் வகையில் பொதுவெளியில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தனது செயலுக்காகவும், தெரிவித்த கருத்துகளுக்காகவும் ஸ்ரீசாந்த் கேரள கிரிக்கெட் சங்கத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தார். அவரது விளக்கத்தையும், வருத்தத்தையும் ஏற்றுக்கொண்ட சங்க நிர்வாகம், அவர் மீதான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. இது ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சார்ந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் விடிவுக்காலமாக அமைந்துள்ளது.

தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் கேரள கிரிக்கெட் லீக்  தொடரில், ‘கொல்லம் செயிலர்ஸ்’ (Kollam Sailors) அணியின் இணை உரிமையாளராக  ஸ்ரீசாந்த் தொடர்ந்து நீடிக்கவும், தனது பொறுப்புகளை மேற்கொள்ளவும் சங்கம் அனுமதி அளித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version