இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே 2வது T20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது
இந்தநிலையில் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (டிச. 11) நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் உள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்பதால் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் 2வது முறையும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க வேண்டுமென்று இந்திய அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
