Close Menu
    What's Hot

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»முத்தரப்பு T20: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாவே அசத்தல்!
    விளையாட்டு

    முத்தரப்பு T20: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாவே அசத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sri Lanka vs Zimbabwe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

    பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராவல்பிண்டியில் நடந்து வரும் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். நேற்று (நவ. 20) நடந்த லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாவே அணிகள் மோதின. முதலில் பேட்டிங்  செய்த ஜிம்பாவே அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் பிரையன் பென்னட் 49 ரன்களும், கேப்டன் சிகந்தர் ராசா 47 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கிறது. ஆரம்பமே அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.    இலங்கை அணி 29 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து வந்த வீரர்களும் ரன்கள் சேர்க்க திணறியதால், இலங்கை அணி 20 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், ஜிம்பாவே அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் ஷனகா 34 ரன்களும், ராஜபக்ச 11 ரன்களும் எடுத்ததை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக ஜிம்பாவே பெற்ற மிகப் பெரிய வெற்றி இதுவாகும். நாளை (நவ. 22) நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது
    Next Article காய்ச்சலின் போது குளிக்கலாமா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    July 5, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.