Close Menu
    What's Hot

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»125 பந்துகளில் 209 ரன்கள் விளாசல்… யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாதனை
    விளையாட்டு

    125 பந்துகளில் 209 ரன்கள் விளாசல்… யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாதனை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    new record
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    யு-19 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு 209 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.

    விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனான அபிக்யான் குண்டு இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். அதிரடியாக விளையாடிய அபிக்யான் குண்டு 125 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன் மூலம் இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அபிக்யான் படைத்தார். தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் வேதாந்த் திரிவேதி 106 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களும் சேர்த்தனர். 409 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மலேசியா அணி 32.1 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இந்திய அணி தரப்பில் மித வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 315 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

    2-வது வீரர்: யு-19 ஆசிய கோப்பை தொடரில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு 209 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலக அரங்கில் யு-19 மட்டத்தில் இரட்டை சதம் விளாசிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அபிக்யான். இதற்கு முன்னர் ஜிம்பாப் வேக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஜோரிச் வான் ஷால்க்விக் 215 ரன்கள் விளாசியிருந்தார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 17.12.2025 | மார்கழி 02
    Next Article ‘பராசக்தி’ ஓடிடி உரிமையை வாங்கியது ஜீ5… ரிலீஸ் ஆகும் முன்பே பல கோடிக்கு விற்பனை
    Editor TN Talks

    Related Posts

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    June 14, 2026

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    June 14, 2026

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.