2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ள சூழலில், இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீரர்களின் வெற்றிக்கொண்டாட புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் உலகக்கோப்பை தொடரின் நாயகனாக  ஜொலித்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதாவது, உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இந்திய வீரர்கள் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில் மற்ற அனைத்து வீரர்களும் இருக்க, சஞ்சு சாம்சன் மட்டும் இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சன் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கில் அவரை எடிட் செய்து நீக்கிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடினர்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தபோது, அந்தப் புகைப்படம் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டது அல்ல என்பது தெரியவந்தது. கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களில் ஒன்றையே கில் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் முன்னால் அமர்ந்திருக்க, மற்றொரு புகைப்படத்தில் அவர் சற்று தள்ளி நின்றுகொண்டிருக்கிறார். கில் பகிர்ந்த கோணத்தில் சாம்சன் மறைந்திருக்கலாம் அல்லது அவர் இல்லாத மற்றொரு பிரேமை கில் பயன்படுத்தியிருக்கலாம் என்று உண்மை கண்டறியும் குழுக்கள் விளக்கம் அளித்துள்ளன.

மேலும், அந்த போட்டோவில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங்கின் முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் பின்னால் மறைந்துவிட்டனர். எல்லா வீரர்களின் முகமும் தெளிவாகத் தெரியும் எத்தனையோ போட்டோக்கள் இருக்கும்போது, கில் ஏன் இந்த போட்டோவை தேர்ந்தெடுத்துப் போட்டார்? என்று ரசிகர்கள் கமென்ட் பாக்ஸில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பு வரை, இந்திய டி20 அணியின் ஓப்பனராகவும், துணை கேப்டனாகவும் இருந்தவர் கில். அவருக்காக சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார். ஆசிய கோப்பையிலும் இது தொடர்ந்தது. பின்னர், சஞ்சுவுக்கு ப்ளேயிங் லெவனில் இடமே கிடைக்கவில்லை. ஆனால், கில் சரியாக விளையாடாததால், உலகக்கோப்பைக்கு சற்று முன்பு அவர் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் சஞ்சு மீண்டும் ஓப்பனராக களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version