பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு 70 வயது பூர்த்தியடைந்தது. பிசிசிஐ விதிகளின் படி 70 வயதை கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால், அவர் அப்பதவியில் இருந்து விலகினார்.
அதனால், துணைத் தலைவராக உள்ள ராஜீவ் சுக்லா தற்போது தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது அதன்படி சச்சினும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.