Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»1100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி!. கல்வியை வளர்க்கும் லட்சணம் இதுதானா?. அன்புமணி கேள்வி?
    தமிழ்நாடு

    1100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி!. கல்வியை வளர்க்கும் லட்சணம் இதுதானா?. அன்புமணி கேள்வி?

    Editor web3By Editor web3January 10, 2026Updated:January 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    large stalinvsanbumani 149231
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியானவர்கள் இருந்தும் நிரப்பாமல் இருப்பது தான் கல்வியை வளர்க்கும் லட்சணமா? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப்பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

    ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். அதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டுள்ளது.

    திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்க வில்லை. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும்.

    தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பல வழிகளில் அரசு பள்ளிகளை சீரழித்த திமுக அரசு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது ஆகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்வித்துறை மிக மோசமான சீரழிவை சந்தித்தது கடந்த ஐந்தாண்டுகளில் தான். இதற்கான தண்டனையை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா வந்த டிரம்பின் ‘வலது கை’!. ஜன.12 முதல் தூதரகப் பொறுப்பை ஏற்கும் செர்ஜியோ கோர்!.
    Next Article TAPS திட்டம்!. ஜன.1ம் தேதியை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு பணம்!. தமிழக அரசு!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.