Close Menu
    What's Hot

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிருஷ்ணகிரி தனியார் நிறுவனத்தில் 52 பணியிடத்துக்கு 2,000 பேர் திரண்டதால் பரபரப்பு!
    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி தனியார் நிறுவனத்தில் 52 பணியிடத்துக்கு 2,000 பேர் திரண்டதால் பரபரப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    krishnakiri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போச்சம்பள்ளி அருகே தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போச்சம்பள்ளி சிப்காட் தொழிற் பூங்கா 1379.76 ஏக்கர் பரப்பளவில் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இத்தொழிற் பூங்காவில் 150 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 45 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் 52 காலிப் பணியிடத்துக்கு ஆட் சேர்ப்பு முகாம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனையறிந்த ஆண்கள், பெண்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சுய விவரத்துடன் நேற்று நிறுவனம் முன்பு திரண்டனர். மேலும், நிறுவனத்தைச் சுற்றி உள்ள 8 கிலோ மீட்டரில் உள்ளவர்களுக்கு தற்போது வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், நேற்று வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் வந்திருந்தனர். இதன் காரணமாக போச்சம்பள்ளி சிப்காட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு போச்சம்பள்ளி வட்டாட்சியர் அருள், பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீஸார், ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்புகளை வெளியிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். 52 பணியிடங்களுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்
    Next Article மே.வங்கத்தில் பாபர் மசூதி கட்ட டிச.6-ல் அடிக்கல்: திரிணமூல் காங். எம்எல்ஏ ஹுமாயூன் கபிர்
    Editor TN Talks

    Related Posts

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    June 13, 2026

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    June 13, 2026

    பீஃப் பிரியாணி சூப்பரா இருந்துச்சு..!! ரோட்டு கடையில் ருசி பார்த்த அமைச்சர்..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு சிந்து நதி நீர் கிடைக்காது!. ராஜ்நாத் சிங் வார்னிங்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.