தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. விருப்பமனு விநியோகத்தை அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதன் ஒருப்பகுதியாக அமமுக – காங்கிரஸ் கட்சிகள் இன்று முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை அளித்து வருகிறது. அந்தவகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது, காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், 234 தொகுதிகளுக்கும் தங்களது விருப்பமனுவை வரும் 10ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளே இன்னும் முடிவு செய்யாத நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்களது விருப்பமனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.. விருப்பமனு விநியோகத்தை அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்துள்ளார். இதற்கு தனி கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அமமுகவில் தமிழகத்தில் போட்டியிட ரூ.10,000, புதுச்சேரிக்கு ரூ.5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
