Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»3% விலை தள்ளுபடி!.” RailOne” செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு!. இன்று முதல் புதிய வசதி அமல்!.
    தமிழ்நாடு

    3% விலை தள்ளுபடி!.” RailOne” செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு!. இன்று முதல் புதிய வசதி அமல்!.

    Editor web3By Editor web3January 10, 2026Updated:January 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    RailOne app
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ” RailOne” செயலி மூலமாக ஆன்லைன் டிக்கெட் எடுப்பவர்களுக்கான புதிய வசதி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    தமிழகத்தை தெற்கு ரயில்வே புறக்கணிக்கிறது என கூறி வந்த எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் எம்ஜிஎஃப்ஏ ஜாபர் அலி தெரிவித்துள்ளார்.

    தமிழகம் – மேற்கு வங்க மாநிலம் இடையே, மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ ரயில் களும், அசாம் -மேற்கு வங்கம் இடையே, முதல் ‘வந்தே பாரத் ஸ்லிப்பர்’ ரயிலும் இயக்க, ரயில்வே வாரி யம் ஒப்புதல் அளித் துள்ளது.

    இந்த ரயில்களின் சேவையை, வரும் 17, 18ம் தேதிகளில், பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என, எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் எம்ஜிஎஃப்ஏ ஜாபர் அலி, புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது ரயில்களில், நாம்பரம் மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி, மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி -திருச்சி, நாகர்கோவில் ஜல் பாய்குரி என. மூன்று ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இடம்பெற்றுள்ளன என்றும்

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கூடுதலாக 25 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் எந்த விதத்திலும் சிரமமின்றி பயணிக்க சிறிய நிறுத்தங்களில் கூட ரயில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தவர், பயணிகள் பாதுகாப்பாக தங்களுடைய பயணங்களை மேற்கொள்ள ஆர்பிஎஃப் வீரர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்றார்..

    தொடர்ந்து பேசிய அவர், ரெயில் ஒன் செயலி மூலமாக பொது பிரிவு பயணிக்கும் பயணிகள் செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் பொழுது அவர்களுக்கு மூன்று சதவீதம் கட்டணம் குறைப்பு செய்யப்படுகிறது என தெரிவித்தார் அது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என கூறினார்.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Rail One செயலியானது முன்பதிவு டிக்கெட்கள், முன்பதிவில்லாத டிக்கெட்கள், பிளாட்பார்ம் டிக்கெட்கள், ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. ரயில் பெட்டிகளின் விவரம், PNR நிலவரம் போன்ற பல்வேறு வசதிகளை பெற முடியும். இதனை ஒரே ஆப்பில் பல வசதிகள் என்ற பெயரில் மத்திய ரயில்வே துறை அமைச்சகம் விளம்பரம் செய்தது.

    ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பிரிவு ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு மொத்த கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வருகிற ஜனவரி 14 முதல் ஜூலை 14, 2026 வரை இந்த முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மூன்று சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், Rail One செயலி மூலம் பதிவு செய்து, எந்த டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி பணம் செலுத்தி இந்த சலுகையை பெறலாம். இதற்கு முன்னர் Rail One செயலியில் R-வாலட் கட்டணங்கள் மூலம் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் மட்டுமே இந்திய ரயில்வே 3 சதவீத தள்ளுபடியை வழங்கி வந்தது. R-வாலட் கட்டணங்கள் மூலம் பயணிகள் பணம் செலுத்திய பிறகு தான் வெகுமதியாக கேஷ் பேக் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் புதிய திட்டத்தின் மூலம், எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையைப் பயன்படுத்தினாலும், டிக்கெட் வாங்கும் போதே தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்க Rail One செயலியில் உள்ள அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவும் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது 3 சதவீத தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சலுகை இந்த மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் ஜூலை 14ஆம் தேதி வரை மொத்தம் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் இருப்பதில் சிக்கலா?- நீதிமன்றம் அதிரடி
    Next Article தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்வு!. இன்றைய நிலவரம் என்ன?.
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    July 15, 2026

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.