இணையத்தில் இன்று இல்லாதது என எதுவுமே இல்லை. எதை தேடினாலும் அதற்கான பதிலும், செய்முறையும் வரும். அப்படியிருக்க, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் சில ரவுடிகள். அப்படி விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டை தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், பர்கத் நகர் அருகேயுள்ள தோப்பில் ரவுடிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், போலீசார் அங்கு சென்ற போது, 4 பேர் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்ததையும் கண்டு பிடித்தனர்.
விசாரணையில் சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜவகர், அசேன், முகமது ஷெரீப், புதுச்சேரியை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெட்குண்டை வெடிக்கச் செய்து அதனை இன்ஸாவில் பதிவிட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் 4 பேர் மீதும் கொலை, அடிதடி வழக்குகள் நிலுவலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
