Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரம்.. இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!
    தமிழ்நாடு

    துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரம்.. இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    high court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது. இன்று, இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும். சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதுவும், ஜூன் 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கூறப்பட்டுள்ளது. அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

    இதையும் படிக்க: இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்!

    தமிழக உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்து விடாது என கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.

    இருப்பினும், மனுதாரர் தரப்பில் இடைக்கால தடை கோரிய மனு மீது வாதங்களை முன் வைக்க நீதிபதிகள் அனுமதியளித்ததை அடுத்து, மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பல்கலைக் கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவங்கப்பட்டு விட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேடுதல் குழு நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை விட தமிழக அரசின் சட்டம் மேலோங்கி நிற்கும் என வாதிட்டார்.

    பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறாத நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் குறித்த விதிகளை ஏற்க மறுத்து 2021 ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு சட்டங்கள் சட்டவிரோதமானதல்ல. யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியுள்ளதால், பதில்மனு தாக்கல் செய்ய 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும் என தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

    பிரதான சட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க கூறவில்லை. தற்போதைய சட்டம் கூட, வேந்தர் என்பதற்கு பதில் அரசு என்ற திருத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனவும் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    இதையும் படிக்க: அனகாபுத்தூர் மக்களுக்கு மாற்று குடியிருப்புகள்.. எங்கெல்லாம்னு தெரியுமா.. அரசே வெளியிட்ட அறிக்கை?

    உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரினார். விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்க கோரினார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைக்க மறுத்தனர்.

    இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த இடைக்கால தடை கோரிய மனுவை விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகி விடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. நாளை இரு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். தேடுதல் குழு நியமநத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என வில்சன் தெரிவித்தார்.

    இதையும் படிக்க: கோவை யானையைக் கொன்றது எது…? குப்பைகளால் நேர்ந்த கொடூரம்!

    பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    counter affidavit government gazette government order hearing High Court Higher Education Department illegality interim stay Lakshmi Narayanan legal provision P. Wilson P.S. Raman political motive search committee supreme court Swaminathan Tamil Nadu government UGC Venkatajalapathi Vice Chancellor appointment அரசாணை அரசிதழ் அரசியல் உள்நோக்கம் இடைக்கால தடை உச்ச நீதிமன்றம் உயர் கல்வித் துறை உயர்நீதிமன்றம் சட்டப்பிரிவு சட்டவிரோதம் சுவாமிநாதன் தமிழக அரசு துணைவேந்தர் நியமனம் தேடுதல் குழு பதில்மனு பல்கலைக்கழக மானியக் குழு பி.எஸ்.ராமன் பி.வில்சன் லட்சுமி நாராயணன் விசாரணை வெங்கடாஜலபதி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்!
    Next Article தீபக் பாண்டியன் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம்.. வாட்ஸ் அப் குழுவில் சர்ச்சை கருத்து.. கோவையில் ஒருவர் கைது !!!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.