அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக CPM மாநிலச் செயலாளர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் குடியிருப்புகள் நீர்நிலை வகைப்பாட்டில் வரவில்லை என்றும், எனவே அம்மக்களை அரசு அப்புறப்படுத்தக் கூடாது என்றும் CPM மாநிலச் செயலாளர் இன்று காலை அமைச்சர் கே.என். நேரு மற்றும் துறைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால் வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையைக் கருத்தில் கொண்டு, தற்போது மக்களை அப்புறப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் தரப்பிலிருந்து, மக்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறுவதாகவும், அரசு யாரையும் பலவந்தப்படுத்தி வெளியேற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version