Close Menu
    What's Hot

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.20 லட்சம் கடன்!. தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்!. அன்புமணி குற்றச்சாட்டு!.
    தமிழ்நாடு

    ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.20 லட்சம் கடன்!. தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்!. அன்புமணி குற்றச்சாட்டு!.

    Editor web3By Editor web3December 20, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.20 லட்சம் கடனை திமுக அரசு வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து 4வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலிலும், அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலிலும் தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. மாநிலத்தின் நிதி மேலாண்மையை திமுக அரசு எந்த அளவுக்கு சிதைத்து வைத்திருக்கிறது என்பதற்கு இது தான் வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.

    2024-25ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ. 9 லட்சத்து 55,690 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பில் பெரிய மாநிலமுமான உத்தரப்பிரதேசம் கூட அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் ரூ. 8.57 லட்சம் கோடி கடனுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் மராட்டியம் ரூ.8.12 லட்சம் கோடி கடனுடன் மூன்றாவது இடத்திலும் தான் உள்ளன. அதிலும், தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் இடையிலான கடன் வித்தியாசம் சுமார் ரூ.1 லட்சம் கோடி என்பதிலிருந்தே தமிழ்நாடு அரசு எவ்வளவு மோசமான கடன் வலையில் சிக்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்திருப்பதற்கு காரணம் திமுகவின் மிக மோசமான நிதி நிர்வாகம் தான். 2020-21ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசம் தான் ரூ. 6 லட்சத்து 110 கோடி கடனுடன் முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாடு ரூ.5 லட்சத்து 68,893 கோடி கடனுடன் இரண்டாவது இடத்தில் தான் இருந்தது. 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு முன்பு இல்லாத வகையில் அதிக அளவில் கடன்களை வாங்கிக் குவித்தது தான் தமிழ்நாட்டின் கடன் சுமை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு காரணம் ஆகும்.

    அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலிலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ரூ.62,456 கோடியை வட்டியாக செலுத்தியுள்ளது. தமிழ்நாட்டை விட அதிக உற்பத்தி மதிப்பு கொண்ட மராட்டியம் ஆண்டுக்கு ரூ.56,727 கோடி மட்டுமே வட்டியாக செலுத்துகிறது. உத்தரப்பிரதேசம் தவிர பிற மாநிலங்கள் ரூ.50,000 கோடிக்கும் குறைவாகவே வட்டி செலுத்துகின்றன.

    திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 2020-21ஆம் ஆண்டில் அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் தான் ரூ.36,970 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாடு ரூ.36,497 கோடி வட்டியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி வட்டி அதிகரிக்கும் அளவுக்கு புதிய கடன்களை திமுக அரசு வாங்கிக் குவித்திருக்கிறது. நடப்பாண்டில் தமிழக அரசு செலுத்த வேண்டிய வட்டி ரூ.70 ஆயிரம் கோடியைத் தாண்டி விடும் என்பது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

    எந்த ஒரு மாநில அரசும் கடன் வாங்காமல் நிர்வாகம் செய்ய முடியாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஆனால், அரசின் செலவுகளையும், மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளையும் வருவாய் வரவுகளைக் கொண்டே சமாளித்து விட்டு, மூலதன செலவுகளுக்காக மட்டுமே கடன் வாங்குவது தான் நல்ல நிதி நிர்வாகத்திற்கான அடையாளம் ஆகும். ஆனால், மூலதனச் செலவை விட மூன்று மடங்குக்கும் கூடுதலாக கடன் வாங்கி தமிழகத்தை மீள முடியாத கடன் சுமையில் திமுக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது.

    இதற்குக் காரணம் வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு கட்டுப்படுத்தாதது தான். வருவாய் பற்றாக்குறையை ஒழித்து வருவாய் உபரியை ஏற்படுத்துவோம் என்று ஒவ்வொரு  ஆண்டும் சூளுரைத்து வரும் திமுக அரசு, ஐந்தாண்டுகளாகியும் வருவாய்ப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவில்லை. அதனால் தான் தமிழக அரசின் கடனும், அதற்கான  வட்டியும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
    2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்தக்கடன் ரூ.9.55 லட்சம் கோடி. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி என வைத்துக் கொண்டால் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன் உள்ளது. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.6 லட்சம் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டக் கடனை கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு தான் வாங்கிக் குவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 55 மாதங்களாக வேதனைகளை மட்டுமே மக்களுக்கு பரிசாக அளித்து வரும் திமுக அரசு, சாதனைகளை படைத்து விட்டதாகக் கூறி மக்களின் வரிப்பணத்தில் கொண்டாட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. திமுகவின் இலக்கணப்படிப் பார்த்தால் அதிக கடன்களை வாங்கிக் குவிப்பதிலும், அதற்காக அதிக வட்டியை செலுத்துவதிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியிருப்பது கூட ஒரு வகையில் சாதனை தான். இப்படி ஒரு சாதனை படைத்ததற்காக திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
    ஒரு மாநிலத்தின் நிதி நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் திமுகவின் ஆட்சி ஆகும். தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலைத் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பெரும் இருளைத் தான் கொடுத்திருக்கிறது. இந்த இருளுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவர். திமுக ஆட்சி அகற்றப்ப்பட்ட பிறகு தமிழக மக்களின் வாழ்வில் உண்மையான வெளிச்சம் பரவும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மலையாள கவுண்டமணி” என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் காலமானார்!. ரசிகர்கள் இரங்கல்!
    Next Article தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    July 3, 2026

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    July 3, 2026

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    புதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.