Close Menu
    What's Hot

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் ஏற்பட்டது மகா தீபம்!
    தமிழ்நாடு

    அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் ஏற்பட்டது மகா தீபம்!

    Editor web1By Editor web1December 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Deepam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் விழாக்கள் விமர்சையாக நடைபெற்றது.

    இன்று (டிச. 3) அதிகாலை, 4 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வாக இன்று (டிச. 3) மாலை அண்ணாமலையார் கோயிலில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’  என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.

    முன்னதாக மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை பாதுகாப்புடன் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற,  4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், மலர்களால் தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டன. கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

    அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்து, சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலோகேஷ் கனகராஜன் கனவு கதைக்கு உயிர் கொடுப்பாரா அல்லு அர்ஜுன் !!!
    Next Article அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
    Editor web1
    • Website

    Related Posts

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    July 3, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    முறைகேடுகள் குறித்து முதல்வர் விஜய் விசாரிக்க வேண்டும்..!! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.