சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 2000 பேர் நேற்று (ஜன.29) அதிமுகவில் இணைந்தனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில்,ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில், அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர், அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் ஆதரவாளர்கள், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவின் பலம் குறைந்ததாக பார்க்கப்பட்டது,
சேலம் அதிமுகவின் கோட்டையாக இருந்துவருவதால் இதனை தன் வசப்படுத்த பல முயற்சிகளை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓமலூரில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசமி முன்னிலையில் மாற்று கட்சியினர் 2000 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது அப்பகுதியில் மாற்று கட்சியினரை தனது கட்சியில் இணைத்துவரும் திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
