சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்தார். அப்போது சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.

இதையடுத்து சட்டசபை தேர்தல் பாமகவுடனான கூட்டணி உறுதியான நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு இரவு 10 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணியில் மேலும் சிலரை இழுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனையின்போது, ஓ. பன்னீர் செல்வ, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியை 10 நாட்களுக்கு இறுதி செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார் அமித் ஷா. இதனால் திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக – பாஜக ஒருங்கிணைந்த கூட்டணியில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஓ.பி.எஸ். மற்றும் தினகரனை கூட்டணியில் இணைத்துவிட்டால் தமிழக அரசியலிலும் பெரும் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version