Close Menu
    What's Hot

    காவிரி நீர்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    நீடிக்கும் பதற்றம்.. நாடாளுமன்ற முற்றுகை எதிரொலி..!! டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்..!!

    தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நேரக்கட்டுப்பாடு- ஆன்லைன் நிறுவனங்கள் மனு தள்ளுபடி
    தமிழ்நாடு

    நேரக்கட்டுப்பாடு- ஆன்லைன் நிறுவனங்கள் மனு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gambling unsplash 768x432 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடும் விதித்தும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

    கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த விதிகளை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

    அந்த தீர்ப்பில், ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் விதிகள் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த ஒழுங்குமுறை விதிகள் உடனடி தேவையாகிறது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவின் குறிப்பிட்டுள்ளனர்.

    மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

    ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழில் புரியும் உரிமை வழங்கி உள்ள போதிலும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமையை மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என கூறி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Aadhaar link online games Aadhaar mandatory for games Chennai High Court gaming verdict court verdict online games gaming time restriction India online gambling regulation Online gaming India online gaming rules Tamil Nadu responsible gaming India Tamil Nadu gaming law
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article– முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு
    Next Article சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு ஜாமின்கோரி இன்ஸ்பெக்டர் மனுத்தாக்கல்.
    Editor TN Talks

    Related Posts

    காவிரி நீர்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    July 20, 2026

    தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    July 20, 2026

    நீதிமன்றங்களில் காவல்துறையினர் எப்படி ஆஜராகவேண்டும்? – சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவு

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நீர்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    நீடிக்கும் பதற்றம்.. நாடாளுமன்ற முற்றுகை எதிரொலி..!! டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்..!!

    தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    DC வீரர் அபிஷேக் போரலை உடனே கைது செய்க..!! கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    நீதிமன்றங்களில் காவல்துறையினர் எப்படி ஆஜராகவேண்டும்? – சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.