Close Menu
    What's Hot

    டெல்லி  டூ திருச்செந்தூர்… ஐந்தாண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர்!

    நாளை முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்!. திமுக புறக்கணிக்க முடிவு?

    ஓவர் ரேட்டுக்கு மது விற்றால் தப்ப முடியாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?
    தமிழ்நாடு

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    editor5By editor5August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 26 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, அம்மா உணவகம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து கடும் வாதப்பிரதிவாதங்கள் வெடித்தன. அதிமுக சார்பில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முந்தைய ஆட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

    “மாற்றம், மாற்றம் என்று சொன்னீர்களே… அது வெறும் பெயர் மாற்றமா?” என கேள்வி எழுப்பிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம் தற்போது ‘அண்ணன் சீர்’ திட்டமாகவும், பசுமை வீடு திட்டம் ‘வெற்றி வீடு’ திட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மகளிருக்கான விலையில்லா ஆடுகள் திட்டங்களும் வேறு பெயர்களில் தொடரப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தற்போதைய தவெக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். அம்மா உணவகம் சரியாக செயல்படாத நிலையில் அதன் பெயரை மாற்றாமல் நிதி ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து நடத்தப்படுவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அதில் குறைபாடுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் திமுக ஆட்சியிலும் அதே பணியாளர்களுடன் நகராட்சி நிதியில் தொடர்ந்து இயங்கியதாகவும், தான் அந்தத் துறையை கவனித்ததாகவும் விளக்கினார். இதற்கு எதிர்வினையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என நேருவின் கருத்தை சுட்டிக்காட்டினார்.

    அதிமுக ஆட்சியில் 2018-ல் ‘அண்ணன்’ இருந்தபோது ரூ.100 கோடி தனியாக ஒதுக்கப்பட்டு மாநகராட்சிக்கு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த இடத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தெளிவாக சொல்லுமாறு கூச்சலிட்டனர். ஆனால் வேலுமணி அதைத் தவிர்த்து ‘அண்ணன்’ என்றே குறிப்பிட்டு கடந்து சென்றார்.

    ஜெயலலிதாவால் 2013-ல் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், குறைந்த விலையில் இட்லி, சாதம் போன்ற உணவுகளை வழங்கும் பிரபலமான திட்டமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சம்பவ வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, அதிமுக உள்கட்சி பதற்றங்களை மீண்டும் வெளிச்சம் போட்டுள்ளது.

    Edappadi K. Palaniswami SP Velumani
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!
    Next Article பரபரப்பான நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு!!
    editor5

    Related Posts

    டெல்லி  டூ திருச்செந்தூர்… ஐந்தாண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர்!

    August 7, 2026

    நாளை முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்!. திமுக புறக்கணிக்க முடிவு?

    August 7, 2026

    ஓவர் ரேட்டுக்கு மது விற்றால் தப்ப முடியாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி  டூ திருச்செந்தூர்… ஐந்தாண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இளைஞர்!

    நாளை முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்!. திமுக புறக்கணிக்க முடிவு?

    ஓவர் ரேட்டுக்கு மது விற்றால் தப்ப முடியாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!!

    ’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’

    பரபரப்பான நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.