Close Menu
    What's Hot

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு» கூட்டணி முடிவு!. பின்வாங்கிய மாணிக்கம் தாகூர்!. பரபரப்பு பதிவு!
    தமிழ்நாடு

     கூட்டணி முடிவு!. பின்வாங்கிய மாணிக்கம் தாகூர்!. பரபரப்பு பதிவு!

    Editor web3By Editor web3March 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Manickam Tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ‘அதிகாரப் பகிர்வு’ (Power Sharing) அளிக்கப்பட வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் வெறும் தேர்தல் நேரத்தில் மட்டும் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் கட்சி அல்ல என்றும், ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நிலவும் கூட்டணி ஆட்சி முறையைத் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பது அவரது முக்கிய வாதமாக உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே நிலவும் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய அவர், கடந்த 58 ஆண்டுகளாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருப்பது கட்சியின் வளர்ச்சியைப் பாதிப்பதாகக் கூறி வருகிறார்.

    இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் பி. சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (மார்ச் 3 ஆம் தேதி) மதியம் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டணி எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய சந்திப்பாக கருதப்பட்டது.

    பேச்சுவார்த்தையின் போது திமுக 27 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை இடங்களை வழங்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சந்திப்பு முடிந்தபின் பி. சிதம்பரம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

    https://x.com/manickamtagore/status/2029019345096196275

    இந்த நிலையில் கூட்டணி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், ‘கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்புதான். ஆனால் எந்தவொரு தனிநபரையும் விட கட்சியே மிக உயர்ந்தது. நமது விருப்பத்துக்கு ஏற்ப தலைமை எடுக்கும் முடிவுகள் இல்லாவிட்டாலும், ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் ஏற்றுக் கொள்வதே உண்மையான கடமை. ஏனென்றால் ஒன்றுமையே மிகப்பெரிய சக்தி’ என்று பதிவிட்டு உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேமுதிகவிற்கு 1 ராஜ்யசபா சீட்!. திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம்!.
    Next Article  அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்!. ஈரானில் பலி எண்ணிக்கை  787 ஆக உயர்வு!. குறையாத போர் பதற்றம்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    July 5, 2026

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.