அதிமுக கூட்டணியில்  தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், எடப்பாடி பழனிசாமியும் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ NDA கூட்டணியில் தவெக இணையுமா? இணையாதா என்பது எனக்கு தெரியாது.. நான் டெல்லிக்கு செல்லவில்லை.. என்று கூறினார்.. உடனே செய்தியாளர்கள் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த நயினார் “ புதிய கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய அவர் “ நடிகர் ரஜினிகாந்த் மீதான ஆதவ் அர்ஜுனா விமர்சனத்தை தவெக தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். நடிகர் ரஜினிகாந்த் மீதான விமர்சனத்துக்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version