புதுச்சேரி அரசியலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் ஏற்பட்டுள்ள “சீட்” மோதல், தற்போது கூட்டணியே உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிதாகக் களம் இறங்கியுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) காரணமாக, முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021 தேர்தலைப் போலவே, இந்த முறையும் என்.ஆர். காங்கிரஸிற்கு 16 இடங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 14 இடங்கள் என தொகுதிப் பங்கீடு ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருந்தது. ஆனால், தற்போது பாஜக தரப்பில் இருந்து திடீரென ஒரு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு (LJK) பாஜகவின் கோட்டாவில் இருந்து அல்லாமல், பொதுவான இட ஒதுக்கீட்டில் சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாஜகவின் தலையீடுகளால் அதிருப்தியில் இருந்த முதல்வர் ரங்கசாமி, இந்தப் புதிய நிபந்தனையைக் கேட்டு கடும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. “எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் கை வைக்க முடியாது.”“கூடுதல் அழுத்தம் கொடுத்தால், கூட்டணியில் இருந்து வெளியேறி 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயார்” என ரங்கசாமி பாஜக மேலிடப் பொறுப்பாளர்களிடம் கறாராகத் தெரிவித்துவிட்டதாக  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version