Close Menu
    What's Hot

    மத்திய அரசின் மவுனம் வெட்கக்கேடானது; அமெரிக்க தாக்குதல் ; பிரதமர் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விளம்பரத்திற்காக கோடி கணக்கில் செலவு… 1% கூட மாணவர்களுக்கு செலவிடவில்லை… அண்ணாமலை குற்றச்சாட்டு…
    தமிழ்நாடு

    விளம்பரத்திற்காக கோடி கணக்கில் செலவு… 1% கூட மாணவர்களுக்கு செலவிடவில்லை… அண்ணாமலை குற்றச்சாட்டு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2025Updated:July 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரத்திற்காக கோடி கோடியாக செலவிடுவதாகவும், அதில் 1 சதவீதம் கூட மாணவர்களின் நலனுக்காக செலவிடவில்லை எனவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மாணவர் விடுதிகளில், தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க., அரசு தெரிவித்திருந்தது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள்.

    ஒரு நாளைக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில், தி.மு.க., அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

    பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. கடந்த ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவிகள் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்க, தனது விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை தி.மு.க., அரசு.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை” என சாடியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதெற்கு பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை இல்லை… பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை…
    Next Article கோலாகலமாக நடந்தேறிய திருசெந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு..
    Editor TN Talks

    Related Posts

    மத்திய அரசின் மவுனம் வெட்கக்கேடானது; அமெரிக்க தாக்குதல் ; பிரதமர் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்

    June 14, 2026

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    June 14, 2026

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய அரசின் மவுனம் வெட்கக்கேடானது; அமெரிக்க தாக்குதல் ; பிரதமர் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    அமெரிக்கா சொல்லுது.. பிரதமர் மோடி அப்படியே கேட்டு நடக்கிறார்..!! ராகுல் காந்தி விமர்சனம்..!!

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.