மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருந்தனர். அவ்வாறு நடைபெறும் சித்திரை திருவிழாவில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,

சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் மீனாட்சி அம்மன் கோயிலில் பார்க்கிங் அருகே 16 வயது சிறுவன் குபேந்திரன் என்பவர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், குபேந்திரனுக்கும் மதுரையை சேர்ந்த 5 பேருக்கும் இடையே சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொலையில் ஈடுபட்டது முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், ஆகியோர் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version