பிராட்வே பேருந்து நிலைய புனரமைப்பு பணி காரணமாக, அப்பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னையில் பழமையானது பிராட்வே பேருந்து நிலையம். நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இப்பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.823 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த புனரமைப்பு பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன.

பின்னர் அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலையுடன் கடைகள் முழுவதுமாக அகற்றப்பட வேண்டும் என கடை வைத்திருப்பவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் படிப்படியாக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version