சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த விசாரணையின் இடைக்கால அரிக்கையை விசாரணை அதிகாரி கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழக காவல்துறையினரிடம் இருந்து அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version