தமிழ்நாட்டில் ஜூன் 6-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல், சுமார் 3.1 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூன் 6ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் பெய்யும் இந்த மழை கோடை வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version