Close Menu
    What's Hot

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»Breaking :தலைநகரில் பரபரப்பு.. முக்கிய கட்டிடத்தில் தீ விபத்து.. முடங்கிய சேவைகள்!
    தமிழ்நாடு

    Breaking :தலைநகரில் பரபரப்பு.. முக்கிய கட்டிடத்தில் தீ விபத்து.. முடங்கிய சேவைகள்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 12 20 at 12.49.16 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் மக்கள் நிறைந்த பிரதான பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் மத்திய மண்டலம் அலுவலகம் அமையப்பெற்றுள்ள கட்டிடம் மொத்தம் 8 மாடிகளை கொண்டது. இதில் 2-வது மாடியில் இருந்து இன்று (20.12.25) காலை திடீரென கரும்புகை வெளியேறியது. அப்புகை மளமளவென பரவத் தொடங்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    WhatsApp Image 2025 12 20 at 12.49.17 PM

    இதையடுத்து, சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    காலை அலுவலக வேலை நேரத்திற்கு முன்பாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரிதாக ஊழியர்கள் யாருமில்லை. அலுவலகத்துக்குள் இருந்த ஒரு நபர் மட்டும் விரைவாக வெளியே அழைத்துவரப்பட்டிருக்கிறார். அதனால் இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    இந்த திடீர் தீ விபத்தின் காரணமாக, சர்வர் அறைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர மருத்துவத்திற்காக ‘108’ சேவை, தமிழ்நாடு காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கான ‘100’ தொலைபேசி சேவை, மின் கட்டணம் (EB BILL) செலுத்துவதற்கான சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல்கள் விரைந்து சரிசெய்யப்பட்டு வருவதாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர்.

    bsnl office fire Chennai anna salai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉங்கள் குழந்தைகள் தனியாக இருப்பதை விரும்புகிறார்களா?. எச்சரிக்கை அறிகுறி!.
    Next Article பிட்புல், ராட்வீலர் வாங்கி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: இன்று முதல் அமல்
    Editor TN Talks

    Related Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    July 4, 2026

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    July 4, 2026

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.