சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வெடிகுண்டு நிபுரணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பள்ளிகள், ரயில் நிலையம் பகுதிகளில் அவ்வபோது வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வருவது வாடிக்கையாகி வருகிறது. நேற்று சென்னை மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து கோயம்பேடு மார்க்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால், அது வெறும் புரளி என தெரிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த சிறுவனை கோயம்பேடு போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
அந்த புரளி அடங்குவதற்குள் சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இதனால், தலைமை செயலகத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுரணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடமைகள், பைகள் உள்ளிட்டவைகளில் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.