பாஜக தனது பொய், பித்தலாட்டங்களை அரங்கேற்ற தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. வாக்காளர் பெயர் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுப்பட்டு வாக்கு திருட்டு செயலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

அவரது இந்த குற்றச்சாட்டை பறைச்சாற்றி பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நெல்லையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய செல்வப்பெருந்தகை, பொய், பித்தலாட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக  தேர்தல் ஆணையத்தை கையில் வைத்து கொண்டு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியதுடன், கண்டனத்தையும் பதிவு செய்தார்.

மேலும், மக்களுக்கான பிரச்சினைகளை காங்கிரஸ் எப்போதும் கையில் எடுக்கும்.தமிழகத்தை வலியுறுத்தி பல்வேறு மக்கள் பிரச்சனைகளை இந்த மாநாட்டில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளோம். குஜராத் மாடல் மாதிரி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் ஜொலிக்க போவதாக பாஜகவினர் சொன்னார்கள் குஜராத்தில் ஒரு வாக்குக்கு 15 லட்சம் என சொன்னார்கள். 11 ஆண்டுகள் கடந்து போதும் கொடுக்க முடியவில்லை.

பாஜகவினர் பொய் பித்தலாட்டகாரர்கள். திருட்டும் புரட்டும் சொல்லி போலி வாக்குறுதி கொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது.பாஜகவின் காலை நிதீஷ்குமாரும் சந்திரபாபு நாயுடு எப்போது வாரலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகம் எதைச் சொல்கிறதோ அதனை மதிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர் ஆகையால்  கொல்லைப்புறமாக  ஆட்சி அமைப்பதை வேண்டாம் என அதனை புறக்கணித்தோம். வாக்கு திருட்டு மூலம் பாஜக மூன்று முறை ஆட்சி அமைத்துள்ளது. வாக்கு சுதந்திரத்தை தேசியத்தின் இறையாண்மையை ராகுல் காந்தி பாதுகாத்துள்ளார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே ஆகியோர் தமிழகத்திற்கு வர உள்ளனர்.3 லட்சம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்துகொள்ளும் கிராம கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டில் தொண்டர்கள் தலைவர்கள் மத்தியில் தேசிய தலைவர்கள் உரையாற்ற உள்ளனர் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அகில இந்திய பொதுசெயலாளர் கிரிஷ்சோடங்கர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர்,  தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர்அல்போன்ஸ்,  பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபிமனோகரன், ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட்,  உள்பட பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version