சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4வது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னை டிஜிபி அலுவகத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் இமெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருப்பது.
அதில், அமெரிக்க தூதரகம் அதன் பள்ளி வளாகம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றங்களில் 6 ஆர்டிஎக்ஸ் வகை வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றங்களில் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் என தொடர்ந்து 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்பட்டுத்துள்ளது.