Close Menu
    What's Hot

    குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!

    மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்;  பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு, அமித் ஷாவுடன் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

    கனடா மீது 50% வரி..!! இது நியாயமா..?? டிரம்புக்கு எதிராக கொந்தளித்த கார்னி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை எங்கெங்கு கனமழை? வானிலை மையம் சொல்வது என்ன?
    தமிழ்நாடு

    நாளை எங்கெங்கு கனமழை? வானிலை மையம் சொல்வது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடமாவட்டங்களில் மழை நீடிக்கும் நிலையில், நாளை (டிச.4) எங்கெங்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இன்று (03-12-2025): தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நாளை (04-12-2025): தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    05-12-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    06-12-2025 முதல் 09-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

    இன்று (03-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 24-26° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    நாளை (04-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜப்பான் மொழியில் வெளியாகும் ‘புஷ்பா 2’!
    Next Article மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் SK?
    Editor TN Talks

    Related Posts

    குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!

    July 21, 2026

    தவெக அரசின் ஆணவத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    July 21, 2026

    கரூர் நெரிசல்; அரசுப் பணி வழங்கிய விவகாரம்!. பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம்!.

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!

    மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்;  பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு, அமித் ஷாவுடன் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

    கனடா மீது 50% வரி..!! இது நியாயமா..?? டிரம்புக்கு எதிராக கொந்தளித்த கார்னி..!!

    வியட்நாமில் சோக சம்பவம்..!! பற்றி எரிந்த ஆம்னி பேருந்து..!! 7 பேர் பரிதாப பலி..!!

    தவெக அரசின் ஆணவத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.