சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளை சைதாபேட்டையை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். அந்த வகையில் நேற்றிரவு முழுவதும் கட்சி வேலைகளை கட்சி அலுவலகத்தில் செய்த சைதாபேட்டை அதிமுக செயலாளர் சைதை சுகுமார், இரவு அங்கேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் அதிகாலையில் பார்க்குபோது சைதை சுகுமார் கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை பார்த்து கட்சி தொண்டர்கள் பதறிய நிலையில் தகவலறிந்து போலீசார் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமரன் நகர் போலீசார் சுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வியத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சுகுமார் இறந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அவரின் தற்கொலைக்கு யார் காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version