தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 25 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து இரயில் மூலமாக காட்பாடி செல்கிறார். அங்கிருந்து, வேலூர் செல்லும் அவர், அங்கு கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையினை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அதன் பின் மாலை அங்கிருந்து புறப்பட்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை மட்டும் கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
பின்னர் சாலை வழியாக திருப்பத்தூர் செல்லும் அவருக்கு ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் ரோட் ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.அன்று இரவு திருப்பத்தூர் அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
26 ஆம் தேதி காலை ஜோலார்பேட்டையில் நடைபெறும் அரசு நலத்திட்டா உதவிகள் வழங்கும் நிகழ்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு 26 ஆம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து இரயில் மூலமாக புறப்பட்டு முதலமைச்சர் சென்னை திரும்புகிறார். மேலும், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ரோட் ஷோ நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.