தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ்-2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இவர்​களின் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது.

தொடர்ந்து தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டு வரு​கிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​கள் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி மே 8-ல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. இதனால் பிளஸ்-2 விடைத்​தாள் மதிப்​பீடு முடிக்​கப்​பட்​டு, மாணவர்​களின் மதிப்​பெண்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், தேர்வு முடிவு​கள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டுள்​ள​தால் தேர்வு முடிவு​களை வெளி​யிட அரசின் ஒப்​புதலைப் பெற வேண்​டும். இதனால், திட்​ட​மிட்​டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவு​களை வெளி​யிட முடி​யாது. புதிய அரசு அமைந்​ததும், உரிய ஒப்​புதல் பெற்று தேர்வு முடிவு​களை வெளி​யிட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகின்றன’’ என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version