உற்பத்தித் துறையில் 2023-24 ஆண்டில் அதிக வேலைவாய்ப்புகளை தந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற மத்திய அரசின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு..

திராவிடத்தால் வாழ்கிறோம்!
திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!

திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ!

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!

#DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!

Share.
Leave A Reply

Exit mobile version