சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் துறை சார்பான ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, இன்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் கைத்தறித்துறை சார்பான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ஒவ்வொரு துறை சார்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது