கோவை – அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாட்டின் மிக நீண்ட மேம்பாலமாக கோவை – அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 3வது பெரிய தரைவழிப்பாலம் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக 10 வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு என பெயர்சூட்டப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மேம்பாலம் திறக்கப்பட உள்ளது. மேம்லாபத்தை திறக்கும் பணிக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை புறப்பட்டார்.
இந்த ஜிடி நாயுடு மேம்லாபத்தில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளாவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் 10 கிலோ மீட்டர் தூரத்தை 10 நிமிடங்களில் கடந்து விடலாம். குறிப்பாக விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை, உப்பிலிபாளையம் சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி ஜிடி நாயுடு மேம்பாலத்தால் குறைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.